தேசிய விருது வெற்றியை கொண்டாடிய வேல்முருகன்! ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு காசு மாலை அணிவித்து நேரில் வாழ்த்து
தேசிய விருது வெற்றியை கொண்டாடிய வேல்முருகன்! ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு காசு மாலை அணிவித்து நேரில் வாழ்த்து
சென்னை:
72-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்று, தனது திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ள இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தற்போது திரையுலகினரிடமிருந்து தொடர்ந்து பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்று வருகிறார்.
மூன்றாவது முறையாக தேசிய விருதைப் பெற்றிருக்கும் இந்த மகத்தான சாதனையை முன்னிட்டு, பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன், ஜி.வி. பிரகாஷ்குமாரை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் சிறப்பம்சமாக, புதிதாக வெளியிடப்பட்ட நாணயங்களால் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட காசு மாலையை ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு அணிவித்து தனது அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தினார். மேலும், சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் ...
