போதைப்பொருள் தடுப்பு, மருத்துவ விழிப்புணர்வை வலியுறுத்தும் ‘செய் செய்யாதே’ – அக்டோபர் 30 முதல் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியீடு!
போதைப்பொருள் தடுப்பு, மருத்துவ விழிப்புணர்வை வலியுறுத்தும் ‘செய் செய்யாதே’ – அக்டோபர் 30 முதல் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியீடு!
இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கம், மருத்துவ விழிப்புணர்வின் அவசியம், மனித உயிரின் மதிப்பு என சமூகத்திற்கு முக்கியமான பல கருத்துகளைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘செய் செய்யாதே’ (SEI SEYYATHE). இப்படம் வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.
ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள இப்படத்தை டாக்டர் எஸ். ராஜா எழுதி இயக்கியுள்ளார். குரு விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். தர்ஷினி ரெட்டி, தபிதா குணரத்னே, மோனிகா ப்ரீத்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, தமிழக முதலமைச்சர் கதாபாத்திரத்தில் நட...
