“ஒரு பார்வையில் பேசும் ‘நிலா’: ‘ஹபீபி’ மூலம் புதிய பரிமாணம் காட்டும் மாளவிகா மனோஜ்!”
“ஒரு பார்வையில் பேசும் ‘நிலா’: ‘ஹபீபி’ மூலம் புதிய பரிமாணம் காட்டும் மாளவிகா மனோஜ்!”
தமிழ் சினிமாவில் மெதுவாக ஆனால் நிச்சயமாக தனது இடத்தை பிடித்து வரும் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மனோஜ். ‘ஜோ’ மற்றும் ‘ஆண் பாவம் பொல்லாதது’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்ற இவர், தற்போது ‘ஹபீபி’ படத்தின் மூலம் இன்னொரு முக்கியமான படிக்கட்டைக் கடக்கிறார்.
இந்தப் படத்தில் அவர் நடித்திருக்கும் ‘நிலோஃபர் நிஷா’ என்ற கதாபாத்திரம் சாதாரணமானது அல்ல. வசனங்கள் குறைவாக இருந்தாலும், கண்கள், முகபாவங்கள், உடல் மொழி ஆகியவற்றின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டிய ஒரு சவாலான பாத்திரம். இப்படியான கதாபாத்திரத்திற்கு சரியான நடிகையை தேடி இயக்குநர் மீரா கதிரவன் பலர் மத்தியில் தேர்வு செய்தவர் மாளவிகா.
சுமார் 200க்கும் மேற்பட்ட ஆடிஷன்களுக்குப் பிறகு அவர் தேர்வு செய்யப்பட்டதோடு, இரண்டு காலகட்டங்களில் வரும் ஒரு ...
