Wednesday, October 28
Shadow

Tag: Haiku Movie Songs

திரையில் மௌனமாகப் பயணிக்கும் இசை… ‘ஹைக்கூ’ படத்தின் இசை உருவாக்கம் குறித்து சித்து குமார்!

திரையில் மௌனமாகப் பயணிக்கும் இசை… ‘ஹைக்கூ’ படத்தின் இசை உருவாக்கம் குறித்து சித்து குமார்!

Latest News, Top Highlights
திரையில் மௌனமாகப் பயணிக்கும் இசை… ‘ஹைக்கூ’ படத்தின் இசை உருவாக்கம் குறித்து சித்து குமார்! “கதாபாத்திரங்களின் உணர்வுகளைத் தாண்டி இசை ஆதிக்கம் செலுத்தக் கூடாது; கதையோடு இணைந்து பயணிக்க வேண்டும்” – இசையமைப்பாளர் சித்து குமார் காதல் உணர்வுகளை மென்மையான மெலடிகள் மூலம் ரசிகர்களின் மனதில் பதிய வைப்பதில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் இசையமைப்பாளர் சித்து குமார். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் ‘உசுரே’, ‘மயிலாஞ்சியே’, ‘இது தான்’, ‘ஜோ’ படத்தின் ‘உருகி உருகி’, ‘ஆரோமலே’ படத்தின் ‘எப்படி வந்தாயோ’ உள்ளிட்ட பாடல்கள் இவரது இசைப் பயணத்தில் குறிப்பிடத்தக்கவை. தற்போது யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் சித்து குமார். காதலும் நகைச்சுவையும் கலந்த இப்படம் அக்டோபர் 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் பாட...
எல்லா வயதினரையும் கவரும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ – இயக்குநர் யுவராஜ் சின்னசாமி நம்பிக்கை!

எல்லா வயதினரையும் கவரும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ – இயக்குநர் யுவராஜ் சின்னசாமி நம்பிக்கை!

Latest News, Top Highlights
எல்லா வயதினரையும் கவரும் காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ – இயக்குநர் யுவராஜ் சின்னசாமி நம்பிக்கை! காதல், உணர்வுகள், எதிர்பாராத திருப்பங்கள் என ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தைத் தரும் ‘ஹைக்கூ’ திரைப்படம் அக்டோபர் 23-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. காதல் கதைகள் எத்தனை முறை சொல்லப்பட்டாலும், அவற்றை அணுகும் விதமும், கதாபாத்திரங்களின் உணர்வுகளும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடிக்கின்றன. அந்த வகையில், காதலை மையமாகக் கொண்டு உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹைக்கூ’. இப்படம் வெறும் காதல் கதையாக மட்டுமல்லாமல், எதிர்பாராத நிகழ்வுகளால் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அதனால் உருவாகும் மனப்போராட்டங்களையும் பேசும் படைப்பாக உருவாகியுள்ளது. வண்ணமயமான காட்சிகள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புரமோஷன் பாடல்கள் என வெளியீட்டுக்கு முன்பே ...
கல்லூரி இளைஞனாகத் தொடங்கி குடும்பத் தலைவனாக மாறும் வாழ்க்கைப் பயணம்! – நடிகர் ஏகன்

கல்லூரி இளைஞனாகத் தொடங்கி குடும்பத் தலைவனாக மாறும் வாழ்க்கைப் பயணம்! – நடிகர் ஏகன்

Latest News, Top Highlights
கல்லூரி இளைஞனாகத் தொடங்கி குடும்பத் தலைவனாக மாறும் வாழ்க்கைப் பயணம்! – நடிகர் ஏகன் காதல், நகைச்சுவையுடன் உறவுகளின் மாற்றங்களையும் பேசும் ‘ஹைக்கூ’ திரைப்படம் அக்டோபர் 23-ல் உலகம் முழுவதும் வெளியீடு! ஒரு மனிதனின் வாழ்க்கையில் காலம் ஏற்படுத்தும் மாற்றங்கள், வயதுக்கு ஏற்ப மாறும் சிந்தனைகள், காதல் மற்றும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் எனப் பல்வேறு உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹைக்கூ’. யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் ஏகன் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் அக்டோபர் 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. கல்லூரி மாணவனின் துடிப்பான இளமைப் பருவத்தில் தொடங்கி, வாழ்க்கையின் அனுபவங்களால் பக்குவமடைந்த குடும்பத் தலைவனாக மாறும் ஒரு மனிதனின் பயணத்தை இப்படம் பதிவு செய்கிறது. கல்லூரிப் பின்னணியில் உருவாகியிருந்தாலும், இளமைக்கே உரிய...