
ரயிலில் நடிகை சனுஷாவுக்கு பாலியல் தொல்லை
பிரபல மலையாள நடிகையான சனுஷா, தமிழில் ‘ரேனிகுண்டா’ படம் மூலம் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து ‘நந்தி’, ‘எத்தன்’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ ஆகிய படங்களில் நடித்தார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் ‘கொடி வீரன்’ திரைப்படம் வெளியானது.
இந்நிலையில், நேற்று சனுஷா கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு ரெயிலில் சென்றிருக்கிறார். தூக்கத்தில் இருக்கும் சனுஷாவை அன்டோ போஸ் என்ற மனிதர், சனுஷாவின் உதட்டில் கை வைத்திருக்கிறார். இதையறிந்த சனுஷா, அவரை போலீசிடம் பிடித்துக் கொடுத்திருக்கிறார்.
இந்த சம்பவத்தின் போது, திரைக்கதை ஆசிரியர் உன்னி மற்றும் ரஞ்சித் என்பவர் மட்டும் சனுஷாவிற்கு உதவி செய்திருக்கிறார்கள். மற்ற பயணிகள் யாரும் சனுஷாவிற்கு உதவி செய்யவில்லை.
இதுகுறித்து சனுஷா கூறும்போது, ‘ரெயிலில் ஏற்பட்ட சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. அந்த சம்பவத்தின் போது, என்னுடன் பயணித்தவர்கள் மட்டுமே எனக்கு உதவி செய...