அடுத்த காதலுக்கு தயாரான ஹாரிஸ் கல்யாண் மீண்டும் ஒரு புது காதல்!
நகரத்தில் உள்ள அத்தனை இளைஞர்களும் பொறாமைப்படும் ஒரு ட்ரெண்டியான நகர்ப்புற பையனாக, இளம் பெண்களின் கனவு கண்ணனாக மாறியிருக்கிறார் ஹரீஷ் கல்யாண். ஹரிஷ் கல்யாண் தனது சமீபத்திய வெற்றிப்படமான 'பியார் பிரேமா காதல்' படத்தில் தனது அழகிய தோற்றம் மற்றும் நடிப்புக்காக மூலை முடுக்கெல்லாம் பாராட்டையும், அன்பையும் பெற்றிருக்கின்றார். வேறு எந்த நடிகரும் இந்த நிலையை அடைந்திருந்தால் அதே வழியில் பயணிக்க விரும்புவர். ஆனால் ஹரிஷ் கல்யாண் ஒரு வித்தியாசமான அவதாரம் எடுக்க முயற்சிக்கிறார். ஆம், புரியாத புதிர் புகழ் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் அடுத்த படத்தை பற்றிய விஷயம் தான் இது. நிச்சயம் அது ஒரு தூய காதல் கதையாக, அதே நேரத்தில் மிகவும் அழுத்தமான படமாக இருக்க போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.
இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது, "ஆம், இது தனித்துவமான முறையில் சொல்லப்படும் பயண பின்னணியிலான ஒரு பிடிவாதமான காதல் க...
