சிவகார்த்திகேயன் படத்தில் முதல் முறையாக இணையும் ஹிப் ஹாப் ஆதி
சிவகார்த்திகேயன் --நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்த படம் ,அறிவிக்க பட்ட முதல் நாளில் இருந்தே பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் படம் தற்காலிகமாக SK 13 என்று அழைக்க படுகிறது. ராஜேஷ் இயக்க, வெற்றி பட தயாரிப்பாளர் கே ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் இசை அமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஒப்பந்தமாகி உள்ளார்.
"இந்த படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு இப்பொழுது முழுமை பெற்று விட்டது என சொல்லலாம். இன்றைய இளைஞர்களின் நாடி துடிப்பை அறிந்த ஒரு இசை அமைப்பாளர் வேண்டும் என தீவிரமாக இருந்தோம். அந்த தீவிரமே எங்களை ஹிப் ஹாப் ஆதியை ஒப்பந்தம் செய்ய வைத்தது. ஒரு பிரபல இசை அமைப்பாளராக,ஒரு வெற்றிப்பட நாயகனாக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி இதற்காக நேரம் ஒத்துக்குவாரோ என்ற சந்தேகம் எழுந்தாலும் அவரை நம்பிக்கையோடு அணுகினோம்.
கதையை கேட்ட உடனே ஒப்பு கொண்டதற்கு அவருக்கு நன்றி.சிவகார்த்திகேயன் நயன்தார...
