இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப்ஹாப் ஆதி தமிழா பிறந்த தினம்
ஹிப்ஹாப் தமிழா (Hiphop Tamizha) என்பது ஒரு தமிழ்நாட்டு தமிழ் சொல்லிசை இசைக்குழு ஆகும்.[1] இதில் ஆதியும் ஜீவாவும் முக்கிய கலைஞர்கள் ஆவார்கள். 2015இல் இருந்து இவர் தமிழ்த் திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார். இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் ஆம்பள திரைப்படத்தின் வழியாக திரைக்கு அறிமுகமானார். இவர்கள் இந்தியாவில் தமிழ் சொல்லிசையின் முன்னோடி இசைக்குழுக்களில் ஒன்றாக கருதப்படுகிறார்கள்.
கோயம்புத்தூரைச் சேர்ந்தவரான ஆதி பள்ளி நாட்களில் கவிதை எழுதுவதில் ஆர்வமாகவும் ராப் இசையால், ஈர்க்கப்பட்டவராகவும் இருந்தார். ஓய்வு நேரங்களில் வீட்டில் இருந்த கணிணியில் இசைக்கோர்வை மென்பொருளை நிறுவி தான் எழுதிய படல்களை ராப் இசையில் பாடி எதாவது பதிவுசெய்துவருவதை வழக்கமாக கொண்டார். 2005 இல் யூடியூப் இந்தியாவில் அறிமுகமானபோது அதில் தான் பதிவுசெய்த பாடல்களை ‘ஹிப்ஹாப் தமிழன்’ என்ற பெயரில் பதிவுசெய்த...
