ஒரு மாதத்தைக் கடந்தும் மந்தமில்லா வேகம் – ‘துரந்தர் பழிவாங்கல்’ உலகளவில் ₹1,783 கோடி வசூல் சாதனை!
ஒரு மாதத்தைக் கடந்தும் மந்தமில்லா வேகம் – ‘துரந்தர் பழிவாங்கல்’ உலகளவில் ₹1,783 கோடி வசூல் சாதனை!
சென்னை,
திரையுலகில் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வரும் ஸ்பை-ஆக்ஷன் திரைப்படமான ‘துரந்தர் பழிவாங்கல்’, வெளியானதிலிருந்து 30 நாட்களை கடந்தும் தனது வசூல் வேகத்தை குறைக்காமல் பாக்ஸ் ஆபிஸில் அபார சாதனைகளை படைத்து வருகிறது.
ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் B62 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து, இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம், ஆரம்ப வாரங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, தற்போது ஐந்தாவது வார இறுதியிலும் தன்னுடைய வலுவான பிடியை தக்கவைத்துள்ளது.
முதல் வாரத்தில் தொடங்கிய அதிரடி வசூல், தொடர்ந்து வாரந்தோறும் நிலைத்திருப்பது இந்த படத்தின் பெரும் பலமாகும். குறிப்பாக, 5வது வார இறுதியிலும் திரையரங்குகளில் ரசிகர்கள் திரளாக வருகை தருவது, படத்தின் நீண்டநாள் வரவேற்பை உறுதி செய்கிறத...
