கார்த்திக் தங்கவேலு உடன் `அடங்க மறு’க்கும் ஜெயம் ரவி
உலக அளவில் மீடியா துறையில், சின்னத்திரை தயாரிப்பிலிருந்து, சினிமா தயாரிப்பிற்கு சென்று மாபெரும் வெற்றி பெறும் கலாச்சாரம் என்றுமே இருந்துள்ளது. அதே பாணியில் பல்வேறு பிரபல தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பில் ஈடுபட்ட பிரபல நிறுவனமான `ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட்' தமிழ் சினிமாவில் கால் பதிக்கவுள்ளனர்.
அவர்களது முதல் தயாரிப்பில் கதாநாயகனாக நடிக்க, ஆக்ஷன் மற்றும் குடும்ப பாங்கான படங்கள் என பல தரப்பட்ட படங்களிலும் கலக்கி முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
சரண், மிஸ்கின் மற்றும் அமீர் உள்ளிட்ட பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்திக் தங்கவேல் இயக்கும் இந்த படத்திற்கு `அடங்க மறு' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.
இப்படம் குறித்து, `ஹோம் மூவி மேக்கர்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தின் உ...