5 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட பிறகு, இந்த நாட்டின் பிரதமராவார் ரஜினிகாந்த்! – நடிகர் ஜீவா
காமராஜருக்குப் பிறகு தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் புதிய புரட்சியை ரஜினிகாந்த் ஆட்சியில் காண முடியும் என்று நடிகர் ஜீவா பேசினார்.
திருவள்ளூரில் ரஜினி மக்கள் மன்றத்தின் அல்லுவலக திறப்புவிழா, மக்களுக்காக குடிநீர் பந்தல் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகள் இன்று நடந்தன. திருவள்ளூர் மாவட்ட இணைச் செயலாளர் சிபி ரமேஷ்குமார், நகரச் செயலாளர் மார்தாண்டன் ஆகியோர் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
நடிகர் ஜீவா இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அலுவலகம் மற்றும் குடிநீர்ப் பந்தலையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அரசுப் பள்ளியில பளஸ் டூ் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றும் மேல்படிப்பு படிக்க முடியாத ஏழை மாணவிக்கு சிபி ரமேஷ்குமார் நிதி உதவி வழங்கினார்.
இதைப் பார்த்து, நிகழ்ச்சிக்கு வந்திருந்த செல்வராஜ் என்ற நிர்வாகி, தானும் நிதி உதவி வழங்குவதாக ஒரு தொகையை வழங்கி அந்த மாண...