
வெளியான 10 நாளில் அதிக வசூல் செய்த படங்கள் மெர்சல் எத்தனையாவது இடம் தெரியுமா?
தமிழ் திரையுலகில் முன்பெல்லாம் படம் தியேட்டர்களில் எத்தனை நாட்கள் வெற்றிகரமாக ஓடியது என்பதை தான் ரசிகர்கள் பெருமை பேசுவார்கள் ஆனால் தற்போது எவ்வுளவு வசூல் செய்தது என்பதைதான் பேசிவருகிறார்கள்.அதிலும் முதல் நாள் வசூல் தான் முக்கியம்.
இந்நிலையில் தற்போது முதல் நாள் அதிக வசூல் செய்த படங்களில் இளைய தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மெர்சல் நான்காவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணாவின் நடிப்பில் வெளிவந்த பிரம்மாண்டமான திரைப்படம் பாகுபலி இரண்டாம் பாகம் முதல் இடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி திரைப்படம் உள்ளது.மூன்றாவது இடத்தில் பாகுபலி முதல் பாகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது....