கலகத் தலைவன் திரைவிமர்சனம் (ரேட்டிங் 4/5)
ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் கலகத் தலைவன். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் உதயநிதி ஸ்டாலின் கலகத் தலைவனில் எப்படி மாறுபட்ட நடிப்பை காட்டியுள்ளார் என்று பார்க்க ஆவலுடன் ரசிகர்கள் காத்து இருந்தனர். அதே போல் தடம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் மீதும் ரசிகர்கள் அளவுகடந்த எதிர்பார்ப்பினை வைத்திருந்தார்கள். அத்தகைய எதிர்பார்ப்பை கலகத் தலைவன் முழுமையாக பூர்த்தி செய்ததா? இல்லையா? வாங்க விமர்சனத்தில் பார்க்கலாம்..
ட்ருபேடார் எனும் கார்ப்ரேட் நிறுவனம் அளவான பெட்ரோலில் மைலேஜ் அதிகமாக தரும் வாகனத்தை கண்டுபிடித்து அதனை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய தயாராகிறது. ஆனால், இந்த வாகனத்தில் இருந்து வெளியேறும் புகை அதிகமான காற்று மாசுவை உண்டாக்கும் என்று அதன்பின் தெரியவ...
