
கல்பதரு பிக்சர்ஸ் P.K.ராம் மோகன் தயாரிக்கும் படத்தில் சலீம் புகழ் நிர்மல் குமார் இயக்கும் படத்தில் நாயகனாக சசிகுமார்
தீவிரம் மற்றும் புத்துணர்ச்சி ஆகியவை தான் சசிகுமாரை பற்றி விவரிக்கின்றன. அவர் குடும்பம், உறவுகள் மற்றும் நட்பை சித்தரிக்கும் விதம் தான் அவரின் இந்த புகழுக்கு காரணமாக அமைந்தவை. இதுவே அனைத்து தரப்பு மக்களிடமும் அவரின் திரைப்படங்களுக்கு எதிர்பார்ப்புகளை உருவாக்குகின்றன. இந்நிலையில் கல்பதரு பிக்சர்ஸ் P.K.ராம் மோகன் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத "தயாரிப்பு எண் 3" படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். சலீம் புகழ் நிர்மல் குமார் இந்த படத்தை இயக்குகிறார்.
தயாரிப்பாளர் பி.கே.ராம் மோகன் இது குறித்து கூறும்போது, "எல்லா தரப்பிலுமே சசிகுமார் மிகப்பெரிய ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். காரணம் அவருடைய திரைப்படங்கள் எப்போதும் குடும்பம் மற்றும் உறவுகளுக்கு அழகான ஒரு பரிமாணத்தை அளிக்கும். பத்து வருடங்களாக மேல் நடிகராக பயணித்து வரும் சசிகுமார் தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்கள், திரையரங்கு ...