வளர்த்துவிட்ட இடத்திற்காக குரல் கொடுக்க மறுப்பது ஏன்..? ; ரஜினி-கமலுக்கு தயாரிப்பாளர் சதீஷ்குமார் கேள்வி..!
“எல்லா பிரச்சனைகளையும் ஒன்றிணைத்து போராட வேண்டும்” ; தயாரிப்பாளர் சதீஷ்குமார் கோரிக்கை
ரஜினி, கமல் இருவரும் அரசியலில் குதித்தே விட்டார்கள்.. இதில் ஒருவர் அரசியல் சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார்.. இன்னொருவர் இமயமலைக்கு சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார். ஆனால் அவர்களை இந்த நிலைக்கு உயர்த்திய சினிமா துறையோ, சரிவிலிருந்து தன்னை மீட்கும் விதமாக கடந்த மார்ச்-1ஆம் தேதி முதல் போராட்டத்தில் குதித்துள்ளது.
சினிமாவின் ஆதார சுருதியாக, அச்சாணியாக இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் முன்னெடுத்து நடத்தும் இந்த போராட்டத்தை, யாருக்கோ எவருக்கோ நடத்துகிறார்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, திரையுலக முன்னணி நட்சத்திரங்கள் யாரும் இதற்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை..
இதனை குறிப்பிட்டு, தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே பிலிம்ஸ் ஜே.சதீஷ்குமார், ரஜினி, கமல் இருவரையும் “இந்த திரைப்பட துறையின் இன்னல்களை களைய ஏ...
