
பிக் பாஸ் வாழ்கைக்கு அவசியம் தான் கமல் ஆவேச பேட்டி
உலக நாயகனான நடிகர் கமல்ஹாசன் சின்னத்திரையில் காம்பியராக பொறுபேற்று நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி தடை செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளது. இந்து மக்கள் கட்சியினர் அளித்துள்ள புகார் மனுவில், சமூகத்தை சீரழிவுக்கும், கலாச்சார சீரழிவுக்கும் வித்திடும் வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இருப்பதால், அதை நடத்தும் நடிகர் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும். தமிழ்த் தாய் வாழ்த்தை கேலி செய்யும் விதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்தது. எனவே கலாச்சார சீரழிவை ஏற்படாமல் இருக்க, இந்த நிகழ்ச்சியை தடைவிதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த நிகழ்ச்சி தொடக்கம் முதலே பல தரப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பி வருகின்றன. சமூக வலைத்தளங்க ளில் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியாலிட்டி ஷோ இல்லை என்றும், அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க வைக்க வேண்டும் என்பதற்காகவே அதில் பங்கேற...