ஒரே நேரத்தில் கமல்ஹாசன் தமிழகத்தில் அரசியல்.. ஐதராபாத்தில் இந்தியன் 2 ஷூட்டிங்
கமல்ஹாசன் ஒருபுறம் அரசியல் என்ட்ரியை தொடங்கியிருந்தாலும், மற்றொரு புறம் இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகளிலும் ஈடுபட இருக்கிறார்
விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இயக்குனர் ஷங்கருடன் 'இந்தியன் 2' படத்தில் இணைந்துள்ளார் கமல்.'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் தற்போது சினிமா அரசியல் தலை தூக்கியுள்ளது. ஏற்கெனவே ரஜினிகாந்த் தனது அரசியல் ஆன்மீக அரசியல் என்று அறிவிப்பு வெளியிட்டார். இவரைத் தொடர்ந்து சமீபத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சி கொடி, பெயர், சின்னம் ஆகியவற்றை அறிவித்தார்.
இதையடுத்து, கமல்ஹாசன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும், நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து வருகிறார். இதற்கிடையில், தனது சி...
