
இனியும் எனக்கு முகமூடி தேவையில்லை நான் அரசியலுக்கு ரெடி நீங்க கமல்ஹாசன்
தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தனியார் டெலிவிஷன் நிகழ்ச்சியில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியபோதும் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சக்தி, கமல்ஹாசனிடம் “என்னைப்பார்த்து நீங்கள் அரசியலில் ஈடுபடலாம் என்று கூறியது கேலி செய்வதுபோல் இருந்ததாக பலரும் பேசினார்கள்” என்று சொல்லி வருத்தப்பட்டார்.
இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், “இப்போது இருக்கிற அரசியல்வாதிகள் தங்களை கேலி செய்யும் நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள். அதனால்தான் நான் அப்படி சொன்னேன். இப்போது கவலைப்படாதீர்கள். ஏனென்றால் அந்த கேலியை இனிமேல் நான் செய்யமுடியாது. நான் இனிமேல் முகமூடி போட்டுக்கொண்டு இருப்பதாக இல்லை. யார் எப்படி இருந்தாலும்.”
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
மேலும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
“நாட்டில் புரட்சி தொடங்கி இருப்பதாக நான் நினைக...