கல்வியை தனியாருக்கு கொடுத்துவிட்டு டாஸ்மாக்கை அரசு நடத்துகிறது- கமல் ஆவேசம்
கல்வியை தனியாருக்கு கொடுத்துவிட்டு டாஸ்மாக்கை அரசு நடத்தி வருவதாகவும் மாணவர்கள் விரும்பும் கல்வியை படிக்க வேண்டும் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார் கமல். இந்த கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதுவரை 2 லட்சம் பேர் வரை சேர்ந்துள்ளதாக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைய வந்த மாணவர்களை வரவேற்றார் நடிகர் கமல். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அவர் பேசுகையில், எதிர்காலத்தை மாணவர்கள் மாற்ற முயல வேண்டும்.
மாற்றத்தை கொண்டு வருவது அடுத்த தலைமுறைக்கு நாம் செய்யும் கடமை. நீங்கள் விரும்பும் கல்வியை படிக்க வேண்டும். அதற்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும். விமர்சிப்பது நம் உரிமை
மாணவர்களை பார்த்து தலைவா என்று நான் கூறும் நிலை வரவேண்டும். யார் வீழ்ந்தாலும் தமிழகம் எழுந்தே தீரும...
