
நடிகை கனகா பிறந்த தினம் இவரை பற்றிய ஒரு சில வரிகள்
தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நடிகை தேவிகாவின் மகளான இவர் 1989-ம் ஆண்டில் கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவரது தந்தை தேவதாசு. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.
2007ல் கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக்குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும் திருமணம் முடிந்து 15 நாள் கழித்து அவர் காணவில்லை என்றும் பிப்ரவரி 6, 2010 வரை அவரைப்பற்றி எத்தகவலும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
கரகாட்டக்காரன், தங்கமான ராசா, பெரிய வீட்டு பண்ணக்காரன், பெரிய இடத்து பிள்ளை, மக்கள் குரல், எதிர் காற்று, வெள்ளையத்தேவன், எங்க ஊரு ஆட்டக்காரன், சீதா, துர்கா, அம்மன் கோ...