மு.மாறன் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் கண்ணை நம்பாதே
புதிய பரிமாண கதைகளும், வேறு வேறு வகையான படங்களுக்கான மிக உற்சாகமான தேடல் உதயநிதி ஸ்டாலினிடம் தெரிகிறது. பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகும் 'கண்ணே கலைமானே' படத்திற்கான எதிர்பார்ப்பு ஏற்கனவே மிக அதிகமாக உள்ள நிலையில், அவரது புதிய படமான 'கண்ணை நம்பாதே' பிப்ரவரி 4ஆம் தேதி அன்று சம்பிரதாய எளிய சடங்குகளுடன் துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் கிரைம் திரில்லர் படமான இந்த படத்தை "இரவுக்கு ஆயிரம் கண்கள்" படத்தை இயக்கிய மு.மாறன் இயக்குகிறார். V.N. ரஞ்சித் குமார் படத்தை தயாரிக்கிறார்.
இயக்குனர் மு.மாறன் சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் தனது முதல் படமான "இரவுக்கு ஆயிரம் கண்கள்" படத்திலேயே தனது திறமைகளை காட்டியிருந்தார். தற்போது அதே வகையில், இந்த படத்தில் தற்போது கிரைம் விஷயங்களையும் சேர்த்திருக்கிறார். "என் முதல் படமான "இரவுக்கு ஆயிரம் கண்கள்" ஆரம்பித்த போது பார்வையாளர்கள் நல்ல கதைகளை ஆதரிப்பார்கள் என்ற குருட்டு ந...