பரபரப்பான ஷீட்டிங்கில் நடிகர் கார்த்தியின் அடுத்த படம் !
நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திண்டுக்கலில் 5.8.19 அன்று துவங்கியது . “கார்த்தி19” என்கிற இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
படங்களின் எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல், படங்களின் தரத்தில் கவனம் செலுத்தி தன் ஒவ்வொரு படத்தையும் மிகவும் கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் கார்த்தி.
கொம்பன், தோழா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டிச் சிங்கம் என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டி வரும் நடிகர் கார்த்தி முற்றிலும் புதுமையான கதையில் “ரெமோ” இயக்குனர் பாக்கியராஜ் கண்ணண் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் ‘மாநகரம்’ புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “கைதி” டீஸர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. முற்றிலும் வித்தியாசமான முறையில் இருந்த “ கைதி” பட டீஸரை பிரபலங்கள் பலரும் பாராட்டினர். இப்ப...

