
கோலிவுட் முன்னணி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சாயிஷா
தமிழ் சினிமாவில் தற்போது அதிக மௌசு கொண்ட நடிகை என்றால் அது சாயிஷா தான் இதனால் முன்னணி நடிகைகள் முதல் ஆட்டம் கண்டுள்ளனரென்று தான் சொல்லணும் காரணம் தொடர்ந்து வெற்றி படங்கள் அது மட்டும் இல்லாமல் இயற்கையாகவே அழகு கலந்த சாயிஷாவுக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகமாகவே போய்கொண்டு இருக்கிறது .
வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் படங்களில் நடித்துள்ள சாயிஷா, அடுத்தபடியாக கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 37வது படத்திலும் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து சில மெகா படங்களில் நடிப்பதற்கும் பேசி வருகிறார்.
அதோடு, கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றி சாயிஷாவை ராசியான நடிகை பட்டியலில் சேர்த்துவிட்டது. அதனால் அவரை படங்களுக்கு புக் பண்ணுவதில் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள். இது தமிழ் சினிமா மீது சாயிஷாவுக்கு பெரிய நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், மும்பையி...