ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை – நடிகர் கிரண் ஆர்யா
நடன இயக்குனர் தினேஷ் கதாநாயகனாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களாலும் பாராட்டப்பட்டு மாபெரும் வெற்றிபெற்ற ஒரு குப்பைக் கதை படத்தில் வில்லனாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர் நடிகர் கிரண்ஆர்யா.
நந்தினி சீரியலில் நடித்து தமிழ் மக்கள் அனைவரது அன்பையும் பெற்றுள்ள கிரண் ஆர்யா தன் சினிமா அனுபவத்தை பகிர்ந்த போது...
நான் சிறு வயாதாக இருக்கும் போதே எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை ஏன் என்றால் என் சித்தப்பா ஒரு இயக்குனர். அப்போதிலிருந்தே சினிமா மீது எனக்கு காதல்.
கல்லூரி முடித்து சொந்தமாக ஒரு தொழில் துவங்கி வேலை செய்து கொண்டிருந்தேன் அப்போது என் நண்பர் குறும்படத்தில் என்னை நடிக்க வைத்தார் அப்போதிருந்து என் சினிமா வாழ்க்கை ஆரம்பமாகி விட்டது.
பிறகு தகடு என்ற தமிழ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமானேன்..பிறகு பாலுமகேந்திரா ஐயா அவரது கூத்துப் பட்டறையில் நடிப்பு பயின்று வந்த...
