
இசை வெளியீட்டில் புதிய முயற்சியை மேற்கொள்ளும் விஜய் ஆண்டனி
கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் ‘காளி’. இப்படக்குழு தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்க ஒரு புது யுக்தியை கையாண்டுள்ளது. 'காளி' படத்திற்காக சிறந்த டியூன்களை விஜய் ஆண்டனி தந்துள்ளார் என கூறப்படுகிறது.
'காளி' படத்தின் 'அரும்பே' பாடலை நேற்று இசையமைப்பாளர் அனிருத் ரிலீஸ் செய்தார். இந்த பாட்டோடு இப்பாடலின் வீடியோவும் ரசிகர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளது. மற்றொரு சிறப்பம்சமாகும். இந்த 'அரும்பே' பாடல் ரசிகர்களின் இலவச சட்டப்பூர்வமான டவுன்லோடிற்கு Vijayantony.com என்ற இணையதளத்தில் தயாராகவுள்ளது. இந்த 'அரும்பே' பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.
இது குறித்து பாடலாசிரியர் விவேக் பேசுகையில், ''விஜய் ஆண்டனி இசையில் நான் எழுதியிருக்கும் முதல் பாடல் இது. அவருடன் பணிபுரிந்து அருமையான அனுபவமாகும். கிருத்திகாவுடன் இதற்கு முன்பு ஒரு மியூசிக் வீடியோவிற்காக பணிபுரிந...