கொலைகாரன் – திரைவிமர்சனம் (தரமான சம்பவம்) Rank 4/5
விஜய் ஆண்டனி தோல்விக்கு முற்றுபுள்ளி வைத்த இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் என்று சொல்லணும் தன் வித்தியாசமான திரைகதை மூலம் தமிழில் மிக அற்புதமான ஒரு திரில்லரை கொடுத்துள்ளார் இயக்குனர் காட்சிக்கு காட்சி நம்மை நாற்காலி நுனிக்கு கொண்டு செல்லும் திரைகதை மூலம் நம்மை மிரட்டி இருக்கிறார்.
சலீம் படத்தில் பார்த்த விஜய் ஆண்டனியை மீண்டும் பார்க்கமுடிந்தது என்று சொன்னால் மிகையாகது இது தான் அவருக்கான கதை இப்படியான படத்தை நடிப்பையும் தான் விஜய் ஆண்டனி ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதற்கு ஒரு சாட்சி இந்த படம் காரணம் ரசிகர்கள் அரங்கத்தில் அப்படியான ஒரு ரசனையை வெளிபடுத்துகிறார்கள்
த்ரிஷ்யம் படம் போல் நியாயமான காரணத்திற்கு ஒரு கொலை செய்துவிட்டு தண்டனையில் இருந்து தப்பிப்பது எப்படி? என்று ஒரு புத்திசாலி யோசிக்கும் வகையிலான கதையை மிக அருமையாக விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். பாராட...
