
சம்பள கட்டுப்பாடு : பின்வாங்கும் ஹீரோக்கள் தடுமாரும் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம்
logo
திரையுலகம் நடத்திய வேலை நிறுத்தத்தின் பலனாக டாப் ஹீரோக்களுக்கு சம்பள கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்ற கருத்து மேலோங்கி இருக்கிறது. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களின் சம்பளம், ரூ.50 கோடி வரை உயர்ந்திருக்கிறது.
சம்பளத்தில் ரஜினி நம்பர் ஒன் இடத்திலும், விஜய், அஜித், கமல் அடுத்த இடத்திலும், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார்கள். முதல் வரிசையியில் இருப்பவர்கள் 25 முதல் 50 கோடி வரை சம்பளம் பெறுகிறார்கள், இரண்டாவது வரிசையில் இருப்பவர்கள் 20 முதல் 25 கோடி சம்பளம் பெறுகிறார்கள், மூன்றாவது வரிசையில் இருப்பவர்கள் 10 முதல் 20 கோடி சம்பளம் பெறுகிறார்கள்.
படத்தின் மொத்த பட்ஜெட்டில் 50 சதவிகிதம் ஹீரோக்களின் சம்பளமாக செல்கிறது. ஆந்திராவில் இருப்பது போல் ஒரு ஹீரோவின் படம் எவ்வளவு வசூலிக்கிறதோ அதன் அடிப்படையில்தான் அவர் சம்பளம் நிர்ணயிக...