“கே.ராஜன் விட்டுச் சென்ற துணிச்சலான குரலை யார் தொடரப் போகிறார்கள்?” – நினைவேந்தல் கூட்டத்தில் எழுந்த கேள்வி!
"கே.ராஜன் விட்டுச் சென்ற துணிச்சலான குரலை யார் தொடரப் போகிறார்கள்?" – நினைவேந்தல் கூட்டத்தில் எழுந்த கேள்வி!
தமிழ் சினிமாவில் அதிகாரம், பணம், அரசியல் என எந்த அழுத்தத்திற்கும் தலைவணங்காமல் உண்மையை உரக்கப் பேசிய சிலருள் ஒருவர் கே.ராஜன். ஆனால் இன்று அவர் இல்லை. கேள்வி என்னவென்றால் – தமிழ் சினிமாவில் சிறு தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழிலாளர்களின் உரிமைக்காக இனி யார் குரல் கொடுக்கப் போகிறார்கள்?
இந்தக் கேள்வியே சென்னை–செங்கல்பட்டு–காஞ்சிபுரம்–திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற கே.ராஜன் நினைவேந்தல் நிகழ்வில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.
கடந்த மே 17ஆம் தேதி காலமான தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜனின் திருவுருவப் படம் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன...
