என் விஷயத்தில் அஜித் தலையிடவேமாட்டார் – பிரபல இயக்குநர் ஓபன்டாக்
அஜித்தை வைத்து வரலாறு படத்தை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார்.
இவர் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவை வைத்து ஜெய் சிம்ஹா படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், படத்தின் புரமோஷனுக்காக பத்திரிகையாளர்களை சந்தித்த கே.எஸ்.ரவிக்குமார் படம் குறித்து பேசினார். அப்போது, நான் இதுவரை 47 படங்களை இயக்கியிருக்கிறேன். கதை, படம், படப்பிடிப்பு என எல்லாவற்றையும் பற்றி தன் படத்தில் நடிக்கும் நடிகர்கள் நிறைய கேட்பார்கள். ஆனால் இதுவரை இரண்டு நடிகர்கள் மட்டும் அதுபோன்ற தன்னிடம் கேட்டதில்லை. எனது விஷயத்தில் அவர்கள் தலையிட்டதே இல்லை. அவர்களில் ஒருவர் பாலகிருஷ்ணா, மற்றொருவர் தல அஜித் குமார் என்று தான் கூறியிருக்கிறார்.
அஜீத் குறித்து நடிகர், நடிகைகள் பலரும் பாராட்டிக் கூறிவரும் நிலையில், ...