ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகிறது ‘போகன்’
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'போகன்' திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதிக்குப் பதிலாக பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'போகன்'. பிரபுதேவா தயாரித்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தன. தணிக்கையில் 'யு' சான்றிதழ் பெற்று, சரியான வெளியீட்டு தேதிக்காக காத்திருந்தார்கள். 2015-ம் ஆண்டின் டிசம்பர் வெளியீடாக இப்படம் தயாரானது.
ஆனால் ஒரு குறிப்பிட்ட படத்தால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது காரணம் அந்த பட குழுவினர் கேட்டு கொண்டதுக்கு இணங்க இந்த ரிலீஸ் தேதியில் மாற்றம் வந்து கொண்டே இருந்தது இந்த மாதமும் அவர்களுகாக தான் படம் ரிலீஸ் தேதி மாற்றத்தோடு இருந்தது
இறுதியாக, பி...
