இயல் இசை நாடகம் – அனைத்திலும் தடம் பதிக்கும் நடிகை Y.G.மதுவந்தி
முந்தைய காலங்களில் நாடக துறையில் சிறப்பாக நடித்த நடிகர்கள் வெள்ளித்திரையில் நடிப்பதற்கு முன்மொழியப்பட்டனர். நடிப்பு என்ற ஒரு கலையின் உட்பொருளை தெளிவாக கற்றுக்கொடுக்கும் ஒரு துணையாக நாடக மேடைகள் அன்று நடிகர்களுக்கு விளங்கியது.
இன்று ஒருசிலரே அப்படிப்பட்ட நாடக கலாசாரத்தை பின்பற்றி வருகின்றனர். நடிகர் Y.G.மகேந்திரா இன்றளவும் நாடக மேடைகள் அமைவதில் பெரும் பங்கு வகிக்கின்றார். அவரை தொடர்ந்து அவரது மகளுமான Y.G.மதுவந்தி மேடை நாடகம் எனும் விருந்தை மக்களுக்கு அளித்து வருகின்றார்.
Y.G.மதுவந்தி தனது தந்தை Y.G.மகேந்திராவுடன் மேடை நாடகங்களில் நடிக்க துவங்கி கடந்த 7 வருடமாக அவரே மேடை நாடகங்கள் தயாரித்து வெளியிட்டு பெரும் வெற்றியையும் பெற்றுள்ளார். Theatre of Maham எனும் இவரது மேடை நாடகங்கள் தயாரிப்பு நிறுவனம் மூலமாக சிவசம்போ, பெருமாளே, தில்லாலங்கடி மோகனாம்பாள் உள்ளிட்ட நாடகங்களை தயாரித்துள்ளார். இவ...
