
புரட்சி தலைவர் MGR டைட்டிலான மதுரவீரனில் சண்முகபாண்டியன் நடிப்பது பெருமையாக உள்ளது – திருமதி. பிரேமலதா விஜயகாந்த் !
மதுரவீரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கேப்டன் விஜயகாந்த் , திருமதி. பிரேமலதா விஜயகாந்த் , L.K. சுதீஷ் , இயக்குநர் வெங்கட்பிரபு , படத்தின் தயாரிப்பாளர் சுப்புநாராயணன் , இயக்குநர் / ஒளிப்பதிவாளர் P.G. முத்தையா , கவிஞர் யுகபாரதி , இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி , படத்தொகுப்பாளர் பிரவீன் K.L , நடிகர் சமுத்திரகனி , எழுத்தாளர் நடிகர் வேல ராமமூர்த்தி , Stunner ஷாம் , நடன இயக்குநர் சுரேஷ் , நடிகர் மைம் கோபி , தயாரிப்பாளர் / நடிகர் தேனப்பன் , நடிகர் மாரிமுத்து , நடிகர் தம்பிராமையா , நாயகி மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கேப்டன் விஜயகாந்த் பேசியது :-
வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இது என்னுடைய மகன் சண்முகபாண்டியன் நடித்த படம் என்பதால் அவரை பற்றி நான் நிறைய பேச விரும்பவில்லை. என் மகனை பற்றி யாராவது குறை கூறியிருந்தால் அதற்கு நான் விளக்...