மீண்டும் விஜய் அட்லீ கூட்டணியா?
தொடர்ந்து இரண்டு இமாலய வெற்றியை விஜய்க்கு கொடுத்தவர் என்றால் அது இயக்குனர் அட்லீ தான் இந்த இரண்டும் நூறு கோடி வசூல் மட்டும் இல்லாமல் விஜய் திரை பயணத்தின் மைல் கல்லாக அமைந்தது இந்த கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என்று ரசிகர்களுக்கு ஒரு ஏக்கம் உண்டு
சர்கார்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்தை அட்லீ இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்' என இரண்டு படங்களை இயக்கினார் அட்லீ.
'மெர்சல்' படத்துக்கு நெகட்டிவ்வான டாக் இருந்ததால் படம் தோல்வியடையும் சூழல் ஏற்பட்டபோது திடீரென ஏற்பட்ட சர்ச்சையினால் வசூல்ரீதியாகப் பெரும் வெற்றிப்படமாக மாறியது. அதனால் விஜய் - அட்லீ கூட்டணி வெற்றிகரமான கூட்டணியாக மாறியது.
தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்கார்' படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நி...