Thursday, January 15
Shadow

Tag: #mgr #mgramachandran #aarthikumar

எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்காக எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர் சுடுவது போல காட்சி படமாக்கப்பட்டது!

எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்காக எம்.ஆர்.ராதாவால் எம்.ஜி.ஆர் சுடுவது போல காட்சி படமாக்கப்பட்டது!

Latest News, Top Highlights
காமராஜ் திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக மறைந்த தமிழக முதலவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு “ எம்.ஜி.ஆர் “ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப்படுகிறது. 1967 ஆம் ஆண்டு தமிழகத்தை அதிர்ச்சியிலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்திய நிகழ்வு எம்.ஜி.ஆர், எம்.ஆர். ராதாவால் சுடப்பட்ட சம்பவம். எம்.ஜி.ஆர் திரைப்படத்திற்காக அந்த சம்பவம் தத்ரூபமாகப் படமாக்கப்பட்டது. மேலும் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி, அன்றைய திரைப்பட இயக்குனர்கள் பி.ஆர்.பந்துலு, கே.சங்கர் ஆகியோர் சம்மந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டன. இத்திரைப்படத்தில் எம்.ஜி.ஆராக சதீஷ், எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், பி.ஆர்.பந்துளுவாக Y.G.மகேந்திரன், ஜானகி அம்மாவாக ரித்விகா, எம்.ஜி.சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, மற்றும் வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை,...
என் வாழ்க்கையில், நான் அடைந்த அனுபவம்  கடந்த 1966ல் எம்.ஜி.ஆர்., எழுதியது

என் வாழ்க்கையில், நான் அடைந்த அனுபவம் கடந்த 1966ல் எம்.ஜி.ஆர்., எழுதியது

Latest News
என் வாழ்க்கையில், நான் அடைந்த அனுபவம் ஒன்றை எனக்காகவும், என்னைச் சார்ந்த நண்பர்களுக்காகவும் எடுத்துக்கூற விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன், சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டர், அண்ணா சாலையில் இருந்தது. அத்தியேட்டரில், "இரு சகோதரர்கள்' என்ற படம் திரையிடப்பட்டது. அதில் கதாநாயகனாக, "இந்திய மேடைப் புலி' என்ற பட்டம் பெற்றிருந்த கே.பி.கேசவன் நடித்திருந்தார். நாடக மேடையிலும், சினிமாவிலும் நடித்து, மிகப் பெரும் புகழ்பெற்றவர் அவர். அவரும், நானும், வேறு சிலரும், அந்த படத்தை காண அன்று சென்றிருந்தோம். இடைவேளையின் போது, அவர் வந்திருப்பதை அறிந்த மக்கள், அவரை பார்ப்பதற்காக எழுந்து, அவர் பெயரைக் கூவி, கூச்சலிடத் தொடங்கினர். அந்த படத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட மிகச் சிறிய வேடங்களில் நடித்திருந்த நான், இதைக் கண்டு திகைத்து, கே.பி.கே., அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். "இத்தனை ஆதரவு பெற்றவருக்கு ...