ஹிந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பிறந்த தினம் அவரை பற்றி அறியாத சில விஷயங்கள்
இவர் தேசிய திரைப்பட விருது வென்ற திரைப்பட நடிகராக இருப்பதோடு, சமூக சேவகர் மற்றும் தொழில் அதிபராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 1976ம் ஆண்டு அறிமுக நடிகராக மிரிகயா நாடக கலைக் குழுவோடு தனது கலை பயணத்தை தொடங்கினார். இந்த நடிப்புக்காக இவர் சிறந்த நடிகருக்கான சிறந்த தேசிய விருதை முதலில் வென்றார். 1980-களில் இவர் உச்ச நிலையில் இருந்த தருணங்களில் சிறப்பான நடன நாயகனாக விளங்கி அதிகளவில் ரசிகர்களை கவர்ந்தார். 1982-ஆம் ஆண்டில் வெளிவந்த டிஸ்கோ டான்சர் படம் மூலம் சிறந்த நடிகராக மாறினார்.
இவர் இதுவரை 350 க்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களிலும் அதே மாதிரியாக அதிக எண்ணிக்கையில் பெங்காளி,ஒரியா,மற்றும் போஜ்பூரி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி மிதுன், மோனர்ச் க்ரூப் பை என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
மிதுன் 1976-ஆம் ஆண்டில் ம்ரினால் சென், இயக்கிய “மிரிகயா” படத்தில் சிறப்பா...
