மீண்டும் ஒரு ‘மங்காத்தா’… அஜித்தை இயக்க வருகிறார் மோகன் ராஜா..???
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்துள்ள வேலைக்காரன் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இப்படத்தின் வெற்றியில் மகிழ்ச்சியடைந்துள்ள இயக்குனர் மோகன் ராஜா, அஜித்தை வைத்து அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த மோகன் ராஜா, ‘ அஜித்தை இயக்க வாய்ப்பு கிடைத்தால் நெகட்டிவ் ஸ்டைல் கதை செய்ய நான் தயார் ' என்று பதிலளித்துள்ளார்.
அஜித் நடிப்பில் பில்லா, மங்காத்தா ஆகிய படங்கள் நெகடிவ் கதாபாத்திரம் ஆதலால் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் மீண்டும் நெகட்டிவ் கேரக்டரில் அதிலும் மோகன்ராஜா இயக்கத்தில் அவர் உருவாக்கும் வித்தியாசமான கேரக்டரில் அஜித் நடித்தால் நிச்சயம் அந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் படமாக இருக்கும் என்று கருதப்படுகிறது....