த்ரிஷா இரட்டை வேடத்தில் நடிக்கும் மோகினி திரைப்படம் வரும் 27ம் தேதி ரிலீஸ்
மோகினி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது இதில் நாயகி த்ரிஷா , இயக்குனர் மாதேஷ் , தயாரிப்பாளர் லட்சுமன் , நகைச்சுவை நடிகர் சுவாமிநாதன் , கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் மாதேஷ் பேசியது :
இந்த படத்தை மிகபிரமாண்டமான படமாக உருவாக்கியுள்ளோம். படத்தில் நாயகி த்ரிஷா சிறப்பாக நடித்துள்ளார். த்ரிஷா நினைத்திருந்தால் கமர்ஷியல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கலாம். ரொமாண்டிக் காட்சிகளில் நடித்துவிட்டு அழகாக சென்றிருக்கலாம். ஆனால் இந்த படத்தில் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். இந்த படம் ஹாரர் படமாக இருந்தாலும் படத்தில் நிறைய எமோஷன்ஸ் காட்சிகள் குடும்பத்தை கவரும் வகையில் இருக்கும். இது ஹாரர் படமாக இருந்தாலும் வழக்கமான படமாக இருக்காது. படத்தில் எபி ஜெனெடிக்ஸ் என்ற கான்செப்ட் உள்ளது. டிஎன்ஏ தொடர்பு பற்றிய விஷயங்கள் தான் படத்தின் முக்கியமான விஷயம். இப்படத்தின் vfx காட்ச...