Friday, January 17
Shadow

வெளியாகிறது த்ரிஷாவின் மோகினி அவதாரம்

தமிழ் சினிமாவில் 15 வருடங்களை கடந்தும் அரை டஜன் படங்களுடன் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா.

அவரது நடிப்பில் ‘96’, ‘சதுரங்க வேட்டை-2’, ‘மோகினி’, ‘கர்ஜனை’ `1818′ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். நிவின் பாலி ஜோடியாக `ஹே ஜுட்’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் காலடி எடுத்து வைக்கிறார்.

இதில் `மோகினி’ என்ற படத்தை ஆர்.மாதேஷ் இயக்குகிறார். இவர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். மேலும் விஜய் நடித்த `மதுர’ படத்தை இயக்கியவரும் இவர் தான். ஹாரர் த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தை சிங்கம் 2 படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

விவேக் மெர்வின் இசையமைத்திருக்கும் இந்த படத்தின் டிரைலர் டிசம்பர் 21-ஆம் தேதியும், இசை ஜனவரி 12-ஆம் தேதியும் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Leave a Reply