![](https://www.cinemapluz.com/wp-content/uploads/2017/12/trisha1.jpg)
தமிழ் சினிமாவில் 15 வருடங்களை கடந்தும் அரை டஜன் படங்களுடன் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் நடிப்பில் ‘96’, ‘சதுரங்க வேட்டை-2’, ‘மோகினி’, ‘கர்ஜனை’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. மேலும் நிவின் பாலி ஜோடியாக `ஹே ஜுட்’ என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
இதில் ‘மோகினி’ என்ற படத்தை ஆர்.மாதேஷ் இயக்கியிருக்கிறார். ஹாரர் கலந்த திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் பொங்கலை முன்னிட்டு வருகிற ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. இந்த டிரைலரை நடிகர் கார்த்தி வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படம் பிப்ரவரியில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.