மஹா திரைவிமர்சனம் (ரேட்டிங் 3/5)
இயக்குநர் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் , நடிகர்கள் ஹன்சிகா மோத்வானி, சிம்பு, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள மஹா திரைப்படத்தின் திரைவிமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.
குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளி பற்றிய திரில்லர் கதை தான் மஹா.
படம் தொடங்கும் போதே ஹன்சிகா மோத்வானி மற்றும் சிம்பு காதல் மற்றும் ரொமான்சுடன் கிளுகிளுப்பாக தொடங்குகிறது. இதையடுத்து 6 மாதங்களுக்கு பிறகு என்ற கார்டுடன் படம் ஆரம்பாகிறது. அதில் ஒரு கொடூர சைக்கோ கொலைகாரன் குழந்தைகளை கடத்தி கொலை செய்கிறான். இந்த கொலைகாரன் கண்ணில் ஹன்சிகாவின் குழந்தை பட, அந்த குழந்தையையும் கடத்தி விடுகிறான். அவனிடம் இருந்து குழந்தை மீட்கப்பட்டதா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதி கதை.
முதல் முதலாக அம்மா கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடித்து பட்டையை கிளப்பி உள்ளார். குழந்தையை தேடி அங்கும் இங்கும் அலையும் ஹன்...


