Friday, March 22
Shadow

Tag: movie

சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.16’ படத்தின் புதிய அப்டேட்

சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே.16’ படத்தின் புதிய அப்டேட்

Latest News, Top Highlights
இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் 16வது படமாக உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 22ம் தேதி துவங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ...
ஐரா – திரைவிமர்சனம் (வித்தியாசம்)  Rank 3.5/5

ஐரா – திரைவிமர்சனம் (வித்தியாசம்) Rank 3.5/5

Review, Top Highlights
நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள "ஐரா"படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது. மா மற்றும் லட்சுமி ஆகிய குறும்படங்களை இயக்கிய இயக்குனர் சர்ஜூன் கேஎம், கடந்தாண்டு எச்சரிக்கை என்ற படத்தின் மூலம் அறிமுக இயக்குனராக அறிமுகமானார். தற்போது உணர்ச்சிமிக்க த்ரில்லர் படமான ஐரா படத்தை உருவாகியுள்ளார். படத்தின் கதையை கேட்டவுடன் இப்படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்புக்கொண்டுள்ளார். தொடர் வெற்றி நாயகியாக வலம் வரும் நயன்தாராவின் அடுத்த மிக பிரமாண்ட படைப்பு ரசிகர்களிடம் ஒரு மிக பெரிய ஒரு எதிர்பார்ப்பை உண்டுபண்ணியுள்ள ஒரு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்கும் நயன்தாரா இந்த படத்திலும் அதை தொடர்ந்துள்ளார்.குறிப்பாக பவானி பாத்திரத்தில் மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிருபித்துள்ளார். சரி இந்த படத்தில் நடித்த நடிகர்கள் கதையை பற்றி பார்ப்போம் இந்த படத்தில் நயன...
வெளியானது விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு

வெளியானது விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு

Latest News, Top Highlights
விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 30ஆவது படத்திற்கு சங்கதமிழன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வரும் 29ம் தேதி வெளியாகவுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். முதன் முதலாக இப்படத்தில் திருநங்கையாக (ஷில்பா) நடித்துள்ளார். மேலும், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகத் பாசில், மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் ஆகியோர் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து கடைசி விவசாயி, சிந்துபாத், ஷியா ராம் நரசிம்ம ரெட்டி, மாமனிதன், இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது....
வைரலாகும் அஜீத் பட படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட  போட்டோ

வைரலாகும் அஜீத் பட படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோ

Latest News, Top Highlights
நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்த படத்தை இயக்குநர் வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் உள்ள அரங்கத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இதில் இந்த படத்தின் நாயகிகள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தாரியங் ஆகியோர் உள்ளனர். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. ...
தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் பிரபல விஜே

தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் பிரபல விஜே

Latest News, Top Highlights
விஜய் டிவி புகழ், தொலைக்காட்சி நடிகை டிடி, நளதமயந்தி, பவர் பாண்டி, துருவ நட்சத்திரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் அனில் பதூரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரொமாண்டிக்’ என்ற படத்தில் திவ்ய தர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆகாஷ் பூரி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகை சார்மி கவுரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்னாத் தயாரிக்கிறார். இப்படத்தில் நடித்தது குறித்து தற்போது திவ்ய தர்ஷினி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் நிறைவடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்....