ஆகஸ்ட் 2 ம் தேதி வெளியாகும் மயூரன்
PFS ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K.அசோக்குமார்P.ராமன், G.சந்திரசேகரன், M.P. கார்த்திக் ஆகியநால்வரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் “ மயூரன் “ மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றிபுனைபவன் என்று பொருள்.
வேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ் ), அமுதவாணன்(தாரை தப்பட்டை ), அஸ்மிதா ( மிஸ் பெமினா வின்னர் ) மற்றும்பாலாஜிராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும்கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் பற்றி இயக்குனர் நந்தன்சுப்பராயன் கூறியது...
மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே நிர்பந்தங்களும் நெருக்கடிகளும் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத அங்கமாகத்தான் இருக்கிறது. நிர்பந்தங்கள் இல்லாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள் நிர்பந்தத்திற்கு பணி யாதவர்கள்போராளிகள். இங்கு அதிர்ஷ்டசாலி களை...
