நாச்சியார் – திரைவிமர்சனம் (முத்திரை ) Rank 3.5/5
தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கும் மட்டும் இல்லை இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் உண்டு அந்த வகையில் ஒரு சில இயக்குனர்கள் படம் முந்தி அடித்துக்கொண்டு டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் ரசிகர்கள் உண்டு அந்த வகையில் இயக்குனர் பாலாவுக்கு அப்படியான ரசிகர்கள் உண்டு அவர் படம் என்றால் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் விநியோகிஸ்தர்கள் முதல் திரையரங்க உரிமையாளர்கள் வரை போட்டி போட்டு வாங்குவார்கள் அது பாலா இயக்கத்தில் வெளியான தாரைதப்பட்டை படத்துக்கு பிறகு தலைகீழாக மாறியது காரணம் அந்த படம் ரசிகர்களை மிகவும் வெறுத்த ஒரு படமாக அமைத்தது காரணம் கதைக்களம் முதல் காட்சியமைப்புக்கள் வரை.
பாலாவுக்கு நிச்சய வெற்றி வேண்டும் என்ற நேரத்தில் வெளிவந்துள்ள படம் தான் நாச்சியார் இந்த படம் மூலம் இழந்த ரசிகர்கள் பட்டாளத்தை மீண்டும் பெறுவாரா இல்லை என்ன நடக்க போகிறது என்று பாக்கலாம்
நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்,ஜோதிகா...

