காவேரி போராட்டத்தில் மௌனம் கடைப்பிடித்தது ஏன்?” – நாசர் விளக்கம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி திரையுலகினர் சார்பில் அடையாள கண்டனப் போராட்டம் நடந்தது. காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் பேசியதாவது:
“இந்தப் போராட்டத்தை துறை சார்ந்த அறிஞர்கள், தொடர்புடைய வல்லுநர்களை எல்லாம் அழைத்து வந்து ஒருநாள் முழுக்க மக்களுக்கான தேவை, தீர்வுகள் என்ன என்பதைப் பற்றியெல்லாம் பேசவேண்டும் என்று திட்டமிட்டோம். ஆனால், அது ஈடேறவில்லை. இந்தக் குறுகிய காலகட்டத்தில், எங்களுக்கு கிடைத்த இந்தச் சிறிய இடத்தில் நடத்தும் இந்தக் கண்டனப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த திரையுலகினருக்கு நன்றி.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் எல்லைகள் வகுத்த பிறகு, நீருக்கான இந்தப் பிரச்சினை பெரிதாக இருந்து வருகிறது. இறைவனுக்கு இணையான விஷயம்தான் தண்ணீர். எதிர்காலத்தில் மூன்...
