“44 நாட்கள் மட்டுமே… இந்திய சினிமாவை அதிர வைக்க வருகிறதா ‘நாக பந்தம்’?”
“44 நாட்கள் மட்டுமே... இந்திய சினிமாவை அதிர வைக்க வருகிறதா ‘நாக பந்தம்’?”
புராணம், புதையல், கடல் போர், தெய்வீக சக்திகள்… ரசிகர்களின் ஆர்வத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ள பான் இந்திய பிரம்மாண்டம்!
இந்திய சினிமாவில் சமீப காலமாக மிக அதிகமாக பேசப்பட்டு வரும் திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது ‘நாக பந்தம்’. இன்னும் 44 நாட்களில் உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ள இந்த புராண அதிரடி சாகச திரைப்படம் குறித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இயக்குநர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம், சாதாரண புராணக் கதையை தாண்டி, பண்டைய ரகசியங்கள், மறைக்கப்பட்ட புதையல்கள், தெய்வீக சக்திகள் மற்றும் அதிரடியான சாகசங்களின் உலகத்துக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தை NIK ஸ்டுடியோஸ...
