‘டோரதி’க்கு குவியும் வரவேற்பு – வலுவான கதைக்கு ரசிகர்கள் கொடுத்த வெற்றிப் பரிசு!
‘டோரதி’க்கு குவியும் வரவேற்பு – வலுவான கதைக்கு ரசிகர்கள் கொடுத்த வெற்றிப் பரிசு!
கோவை ரசிகர்களை கவர்ந்த கார்த்திக் சுப்புராஜின் புதிய படைப்பு – திரையரங்குகளில் அதிகரிக்கும் பார்வையாளர்கள் – நேர்மறையான விமர்சனங்களால் வலுப்பெறும் வாய்மொழிப் பாராட்டு
கார்த்திக் சுப்புராஜின் பத்தாவது திரைப்படமாக உருவாகியுள்ள ‘டோரதி’, திரையரங்குகளில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. வழக்கமான வெற்றிக்கான வணிக அம்சங்களை நம்பாமல், கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், பார்வையாளர்களிடையே பல்வேறு விவாதங்களையும் உரையாடல்களையும் உருவாக்கி வருகிறது.
அடையாளம், நட்பு, ஏற்றுக்கொள்ளுதல், மனித உறவுகள் என பல்வேறு உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘டோரதி’, வழக்கமான திரைப்பட அனுபவத்திலிருந்து சற்று மாறுபட்ட கதைக்களத்தை பார்வையாளர்கள...

