நிமிர் – திரைவிமர்சனம் (அழகு காட்சியமைப்பு)Rank 3/5
மலையாளத்தில் பகத் பாசில் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ என்ற படத்தின் தமிழ் பதிப்புதான் இந்த ‘நிமிர்’.
இப்படத்தில் உதயநிதி நாயகனாக நடிக்க ப்ரியதர்ஷன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
உதயநிதி கிராமத்தில் ஒரு ‘நேஷ்னல்’ என்ற புகைப்பட ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார். அவரது தந்தையாக வருகிறார் மஹேந்திரன். அவரும் மிகப்பெரிய புகைப்பட கலைஞர்தான். வாழ்க்கையில் ரசிக்கும், ரசனைக்கும் புகைப்படத்தை தன்னுடைய கேமராவில் எடுக்க துடிக்கும் ஒரு கலைஞன்.
பிரச்சனை ஒன்றில் சமுத்திரக்கனி உதயநிதியை ஊர் மக்கள் பலர் முன்னிலையில் அடித்து விட, சமுத்திரக்கனியை திருப்பி அடிக்கும் வரை தான் செருப்பு அணிய மாட்டேன் என எடுக்கும் ஒரு சபதமே இந்த படத்தின் கதை.
சமுத்திரக்கனியை திருப்பி அடித்து செருப்பை அணிந்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை. முதல் பாதியில் ஒரு காதலும், இரண்டாம் பாதியில் ஒரு...