திருமணத்துக்காக புது ரூட்டுக்கு தயாராகும் நயன்தாரா
கோலிவுட்டின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தனது காதலரான விக்னேஷ் சிவனை இந்த ஆண்டே திருமணம் செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிக்கும் ஐடியாவில் உள்ளாராம் நயன்தாரா.
ஒல்லிக்குச்சியாக இருக்கும் நயன்தாரா வயதானவர் போன்று தெரிகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்தால் அக்கா, ஆன்ட்டியாக்கிவிடுவார்கள் என்று பயப்படுகிறாராம்.
மலையாள திரையுலகில் திருமணமாகி குழந்தைகளுக்கு தாயான பிறகும் தொடர்ந்து ஹீரோயினாக நடிக்க முடியும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நடிகை மஞ்சு வாரியர் தான்.
தன் சொந்த மாநிலமான கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா. மலையாள திரையுலகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கியுள்ளார். அடுத்தடுத்து மலையாள படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். இந்த ஆண்டே திருமணம் என்பதால் இந்த முடிவு எடுத்திருக்கிற...