ராதாரவி பேச்சுக்கு உச்ச நீதிமன்றம் போகும் நயன்தாரா
நடிகர் ராதாரவி, தன்னை இழிவாக பேசியது குறித்து நடிகை நயன்தார விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சமீபத்திய சர்ச்சைகளுக்கு எனது சிறந்த நடிப்பு மூலமே பதிலளிப்பேன். இன்று எனது நிலையை தெரிவிக்கவே விரிவான விளக்கம் அளிக்கிறேன்.
முதலில் எனக்காக தனது கண்டனை தெரிவித்து, தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுத்த திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு என்பது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இதுமட்டுமின்றி, நடிகர் ராதாரவியையும் பெற்றவர் ஒரு பெண் என்பதை அவருக்கு நினைவுட்ட நான் விரும்புகிறேன். பெண்கள் மீந்து அவரது இழிவான பேச்சுகள் அவரை ஆணாதிக்கம் மிக்கவராகவே காட்டுகிறது. ஜீனியர் நடிகராக இருந்து வரும் அவர், இளைய தலைமுறைக்கு உதாரணமாக இருக்க வேண்டும். அதை விட்டு இதுபோன்று பேசியிருக்க கூடாது. பெண்களை இழிவாக பேசியதுடன், ராதாரவி பெண்கள் குறித்து கீழ்தரமான ஜோக்...
