நெப்போலியன் படத்தின் ரீமேக்கில் ஆர்.கே.சுரேஷ்
தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ், தற்போது நடிகராகவும் வெற்றிகரமாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் அடுத்ததாக `பில்லா பாண்டி' படம் உருவாகி உள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதுதவிர வேட்டைநாய், தனிமுகம், முகம், வர்கம் உள்ளிட்ட படங்களிலும் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடிக்கிறார்.
விக்ரமின் ஸ்கெட்ச், விஜய் ஆண்டனியின் காளி படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் டிராபிக் ராமசாமி, ஷைக்கரி சாம்பு, கரும்புள்ளி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற 'நெப்போலியன்' படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை ஸ்டுடியோ 9 சார்பில் ஆர்.கே.சுரேஷ் கைப்பற்றியிருக்கிறார். தனதுன் ஸ்டுடியோ 9 நிறுவனம் தயாரித்து வெற்றிப் படமான 'தர்மதுரை'க்குப் பிறகு வித்தியாசமான நல்லதொரு கதைக்குக் காத்திருந்த ஆர்.கே.சுரேஷுக்கு ‘நெப்போலியன்’ படத்தின் கதை மிகவும...
